பிரசவத்திற்காக சைக்கிளில் சென்ற அமைச்சர்… கவனம் ஈர்த்த சம்பவம்!
- IndiaGlitz, [Monday,November 29 2021]
சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட நியூசிலாந்து நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் பிரசவ வலியுடன் தன்னுடைய சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மேலும் ஒரு மணிநேரத்தில் அவருக்கு அழகான குழந்தையும் பிறந்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது.
நியூசிலாந்து அமைச்சரவை ஏற்கனவே பல முன்னேற்றமான சட்டங்களால் உலகம் முழுவதும் தனிக்கவனம் பெற்றிருக்கிறது. அந்நாட்டின் சிறிய வயது பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்சன் தனது பிரசவத்திற்கு 3 மாதங்கள் விடுமுறை எடுத்ததும் பின்னர் அங்குள்ள நாடாளுமன்றத்திற்கு தனது குழந்தைகளைக் கூட்டி வந்ததும் உலகம் முழுவதும் பேசப்பட்டது.
தற்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்திவரும் அந்நாட்டின் எதிர்க்கட்சியான க்ரீன் பார்டி கட்சியைச் சார்ந்த பெண் அமைச்சர் ஜுலி ஆனி ஜென்டர் நேற்று அதிகாலை தனது சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து தன்னுடைய சோஷியல் மிடியாவில் பேசிய ஜுலி, சைக்கிளில் செல்ல வேண்டும் என்று முன்பே திட்டமிடவில்லை. ஆனால் அது நிகழ்ந்துவிட்டது.
சைக்கிளில் சென்றபோது முதல் 2-3 நிமிடங்களுக்கு வலியை உணரமுடிந்தது. பின்னர் அதிகாலை 3.04 மணிக்கு குழந்தை பிறந்தது. தற்போது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மினசோட்டாவில் பிறந்த இவர் 5 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்த தீவுநாட்டில் குடிபெயர்ந்து தற்போது எதிர்க்கட்சி அமைச்சரவையில் பங்கு வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2018 இல் அமைச்சர் ஜுலி ஆனி தனது முதல் பிரசவத்திற்காக பைக்கில் சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.