மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி, நடிகை, ...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பசீர்ஹட் தொகுதியில், எம்.பியாக இருப்பவர்தான் நுஸ்ரத் ஜஹான். இவர் இதற்கு முன் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். அரசியலில் மக்களவை உறுப்பினர் ஆன பின்பு, இவருக்கும் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. இதன்பின் சிறிது நாட்களில் தான் கணவரை பிரிந்ததாகவும், எங்களுடைய திருமணம் சட்டமுறைப்படி நடக்கவில்லை என்று நுஸ்ரத் கூறியுள்ளார். இந்த தகவல்கள் சர்ச்சையாக, இதற்கிடையில் இவர் கருத்தரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து நுஸ்ரத் விளக்கமளித்திருப்பதாவது, "எங்களுக்கு இந்தியாவின் சட்டப்படி முறையான திருமணம் நடக்கவில்லை. விவகாரத்து பெற வேண்டிய அவசியமும் இல்லை. நாங்கள் பல நாட்களுக்கு முன்பே பிரிந்து விட்டோம். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட சூழல் சார்ந்தது, இதுபற்றி மேலும் எனக்கு பேச விருப்பம் கிடையாது" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நடிகர் மற்றும் பாஜக-வை சேர்ந்த யாஷ்தாஸ் குப்தாவும், நுஸ்ரத்-ம் காதலித்து வருவதாக செய்திகள் உலாவின. ஆனால் இதுகுறித்த தகவல்கள் எதையும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.
தற்போது நுஷ்ரத் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில், குழந்தை பிறப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments