கோமா நோயாளிக்கு வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம்… நடந்தது என்ன?
- IndiaGlitz, [Tuesday,January 04 2022]
இங்கிலாந்து நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமாவில் உயிருக்குப் போராடிய இளம்பெண் ஒருவருக்கு சோதனை முயற்சியாக வயாகரா கொடுக்கப்பட்டு, அவர் காப்பாற்றப்பட்டு உள்ளார். இந்தத் தகவல் மருத்துவ உலகில் ஒரு சாவலாகப் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள லிங்கன்ஷையர் பகுதியில் வசித்துவருகிறார் 37 வயதான மோனிகா அல்மெய்டா. செவிலியராகப் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த நவம்பரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் நோயின் தீவிரத் தன்மை காரணமாக அவர் நவம்பர் 9 ஆம் தேதி லிங்கன் கவுண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பும் மோனிகாவிற்கு கடுமையான சுவாசக்கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவர் கேடந்த 16 ஆம் தேதி கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
ஏற்கனவே சுவாச உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்ததால் கோமா நிலையில் இருக்கும் மோனிகா உயிர் பிழைப்பது கடினம் என்றே மருத்துவர்கள் கருதி வந்தனர். இந்நிலையில் கோமாவிற்கு முன்னதாக மோனிகாவிடம் ஒப்புதல் கையெழுத்துப் பெற்றிருந்த மருத்துவர்கள் அவருக்கு அதிகபடியான வயாகராவை கொடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி அதிகளவு வயாகரா கொடுக்கப்பட்ட மோனிகா வெறும் 72 மணிநேரத்தில் தானாகவே சுவாரசிக்க ஆரம்பித்து இருக்கிறார் இதனால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர் 45 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 14 ஆம் தேதி வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மருத்துவர்கள் சுவாச உறுப்புகளில் விறைப்புத் தன்மையை ஏற்படுத்துவதற்காகவே மோனிகாவிற்கு வயாகராவை கொடுத்தோம். மேலும் இந்த வயாகரா உடலில் இரத்த நாளங்களை விரிவுப்படுத்துகிறது. இதனால் சுவாசக் குறைபாடு விரைவில் சரிச்செய்யப்பட்டு கோமா நிலையில் இருந்த மோனிகா காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது மருத்துவ உலகில் ஒரு புது முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.