தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல்? பல்லாயிரம் பேருக்கு செலுத்தப்பட்டதாக பகீர் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெர்மனியில் உள்ள ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி மையத்தில் பல ஆயிரக்கணக்கான பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புகரைசல் செலுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெர்மனியின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஃப்ரீஸ்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் கடந்த மார்ச்-ஏப்ரல் வரை 6 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புகரைசல் செலுத்தப்பட்டதாகச் சர்ச்சையை கிளம்பியது. அதுவும் 70 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கே இப்படி நடந்திருக்கும் பட்சத்தில் உப்புகரைசல் செலுத்திய நர்ஸிடம் ஜெர்மனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 6 பேர்களைத் தாண்டி அந்த நர்ஸ் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உப்புகரைசல் செலுத்தி இருக்கலாம் என்றும் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தற்போது ஜெர்மனி போலீசார் கூறி வருகின்றனர். இதையடுத்து அந்த கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 8,000 பேருக்கு, மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என ஜெர்மனி அரசு அறிவித்து இருக்கிறது.
கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்பு கரைசல் செலுத்தியது குறித்து நர்ஸ் அளித்த விளக்கத்தில் நான் 6 பேருக்கு மட்டுமே உப்புகரைசல் செலுத்தினேன். மருந்து குப்பி கைதவறி கீழே விழுந்ததை மறைக்கவே இப்படி செய்தேன் எனக் கூறியுள்ளார். ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்லாயிரம் பேருக்கு அந்த நர்ஸ் உப்புகரைசலை செலுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதனால் அந்த மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 8,000 பேருக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்ட விவகாரம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் காரணம் இருக்கலாமா? எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments