போட்டியாளர்களும் குறைப்பு, நாட்களும் குறைப்பு: சுவராசியமாக செல்லுமா பிக்பாஸ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கருண் ராமன், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கடந்த 3 சீசன்களிலும் 16 போட்டியாளர்கள் கொண்டதாகவும், 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை போட்டியாளர்கள் குறைக்கப்படும் என்றும் பிக்பாஸ் நடக்கும் நாட்களும் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
அதாவது இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 12 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கினாலும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ஒரு சிலர் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தபடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல் போட்டி சுவராசியமாக சென்று டிஆர்பி எகிறினால் போட்டியின் நாட்களும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் டிவி வட்டாரங்கள் கூறுகின்றன
இருப்பினும் போட்டி தொடங்கும் முதல் நாளில் தான் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், எத்தனை நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்பது குறித்த தகவல் உறுதியான தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout