நெருங்குகிறது ஃபனி புயல்: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- IndiaGlitz, [Friday,April 26 2019]
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபனி என்ற புயலாக மாறியுள்ள நிலையில் இந்த புயல் ஏப்ரல் 30ம் தேதி தமிழகதின் வழியே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் சற்றுமுன் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க்ச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புயலை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் சேதங்களை சமாளிக்கவும், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு சுற்றறிக்கையையும் கமிஷனர், ஐஜி, எஸ்பிக்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.