அணுஆயுதம் அதிகமாக வைத்திருக்கும் நாடு: சீனாவா??? இந்தியாவா???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாடுகளிடையே அணு ஆயுதச் சோதனைகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையாகப் பார்க்கப்பட்டாலும் ஒவ்வொரு நாடும் தங்களது ஆயுதப் படைகளை வலுப்படுத்திக் கொண்டே வருகின்றன. தற்போது இந்தியா சீனாவிற்கு இடையே நடைபெற்று வரும் மோதல் நிலைப்பாட்டில் யார் அதிக அணு ஆயுதப் படைகளை வைத்திருக்கிறார்கள்? யார் பலசாலி போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இப்படி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவை விட சீனா அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஏன் பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவான அணு ஆயுதங்கள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஸ்டாக்டேஹாம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) சார்பாக பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சிந்தனைக்குழு ஒரு ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவை விட சீனாவும் பாகிஸ்தானும் அதிக அணு ஆயுதங்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. “2020 ஆண்டு ஜனவரி மாதக் கணக்குப்படி சீன ஆயுதக் களஞ்சியத்தில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. அதே நேரம் பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் மட்டுமே இருக்கிறது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவும் பாகிஸ்தானும் மிகக் குறைந்த அளவிலான ஆயுதங்களை வைத்திருக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டைப் பொறுத்த அளவில் சீனா 190 அணு ஆயுதங்களையும் பாகிஸ்தான் 150-160 அணு ஆயுதங்களையும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்நிலையில் இந்தியாவிடம் 130-140 அணு ஆயுதங்களே இருந்திருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் குறைவான அணுசக்தி அளவை மேம்படுத்தியபோது சீனா அசுர வேகத்தின் தனது அணு ஆயுத கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறது. மேலும் நவீனமயமாக்கலையும் தனது ஆயுதங்களில் புகுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருப்பதாகத் தெரிகிறது ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பிரிட்டனிடம் இதன் அளவு 215 ஆக இருக்கிறது. உலக அளவில் 9 நாடுகளிடம் அதிக அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அந்நாடுகள் தற்போதைய 2020 ஜனவரி கணக்கெடுப்பின்படி 13,400 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் (சிப்ரி) ஆண்டறிக்கை தகவல் கூறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments