என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் சூப்பர் ஹிட் படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

என் டி ஆர் பாலகிருஷ்ணா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று நடைபெறுவதை அடுத்து படக்குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’அகண்டா’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூபாய் 60 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. போயபட்டி ஸ்ரீனு என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று நடைபெறுவதோடு, படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தை இயக்கியவரே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ள நிலையில், இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தில் பணியாற்ற இருப்பதை உறுதி செய்துள்ளார். ’அகண்டா’ முதல் பாகம் வெற்றி பெற்றது போல, இரண்டாம் பாகமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.