அதிமுகவின் வெற்றியை சீமான் காலி செய்தாரா? விளக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்தக் கட்சி வெறும் 3.5% வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது. ஆனால் தற்போது சட்டமன்றத் தேர்தலில் 6.85% வாக்குகளைப் பெற்று தன்னை வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சியாகக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.
இதனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் தமிழகத்தில் ஒரு ஆளுமையாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுவிட்டார் என்றும் கருத்துக் கூறப்பட்டு வருகிறது. அதோடு திருவொற்றியூர் தொகுதியில் அவர் தோற்று இருந்தாலும் இந்தக் கட்சி தொடர்ந்து தன்னை அரசியலில் நிலை நிறுத்திக் கொண்டுவிட்டதாக மூத்தப் பத்திரிக்கையாளர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் 60 தொகுதி வெற்றி வாய்ப்பை நாம் தமிழர் கட்சி தடுத்துவிட்டதாக ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது அதிமுக தோல்வி அடைந்த பல தொகுதிகளில் அதிமுகவிற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையில் இருக்கும் வாக்கு வித்தியாசத்தின் எண்ணிக்கை வெறும் 1,000 க்கும் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாக்கு வித்தியாசத்தை விட நாம் தமிழர் கட்சி கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் பன்மடங்கு வாக்குகளை குவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனக்கென ஒரு ஓட்டு வங்கியை பெற்றுள்ளது. இதில் அதிமுக வெற்றிப்பெற வேண்டிய பல இடங்களில் வெற்றிக்கான வாக்குகளைவிட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று இருகட்சிகளுக்கும் பலத்த நெருக்கடியை நாம் தமிழக கட்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout