சீமானைப் பற்றிய வெளிவராத உண்மைகள்… வைரலாகும் பிரத்யேக வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக அரசியலில் செயல்பட்டு வரும் இவர் இன்றுவரை ஓட்டு வங்கி அரசியலுக்குள் வராமல் தனித்துச் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அதோடு தமிழ்த் தேசியம் குறித்து பேசும் இவரது கட்சியின் கொள்கைகளைக் குறித்தும் திரு.சீமானின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அவ்வபோது சில எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சீமானுடன் இணைந்து செயல்பட்டு வரும் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர் ஜெகதீசன் பாண்டியன் அவர்கள் சீமானைப் பற்றி வெளியுலகிற்கு வராத சில உண்மைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சீமானைப் பற்றி தமிழக அரசியல் கட்சிகள் என்ன நினைக்கின்றன? தமிழக மக்கள் இவரை எப்படி புரிந்து கொண்டுள்ளார்கள்? அதோடு தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்? இன்றைய சூழலில் இந்தக் கொள்கைகளுக்கான தேவை என்ன இருக்கிறது? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ஜெகதீசன் பாண்டியன் அவர்கள் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி, தமிழக அரசியலில் 3 ஆவது இடத்தைப் பிடித்து இருந்தாலும் தொடர்ந்து ஒரு வலிமையான கட்சியாக உருவெடுக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முதற்கொண்டு பல்வேறு சாமானியர்களும் இன்றைக்கு எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இவர் தமிழ்த் தேசியம் பேசுவதே தேவையற்ற ஒன்று என்பது போன்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சூழலில் தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்படி வளர்ந்து வந்தார்? அவருடைய பின்னணி என்ன? அவர் பேசும் அரசியல் தளம் என்ன வகையானது? இந்தச் செயல்பாடுகளால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? என்பது போன்ற அடிப்படையில் ஜெகதீசன் பாண்டியன் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments