எம்.ஆர்.ராதாவை சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை இட்ட என்.எஸ்.கே - ராதாரவி

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

நடிகர் ராதாரவி அவர்கள் INDIAGLITZ-க்கு அளித்த பேட்டியில், எனது தந்தை எம். ஆர். ராதா மற்றும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நாடகத்திலிருந்து வந்தவர்கள். என்.எஸ்.கே அவர்கள் ராதாவை நான் சினிமாவில் இருக்கும் வரை நீ நடிக்கவே வரக்கூடாது என்று சொன்னார். அதை போலவே, எனது தந்தை எம். ஆர். ராதாவும் நடிக்க வரவில்லை. முதல் படம் ராஜசேகரன் உடன் நிறுத்திக் கொண்டார்.

அதேபோல என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தலைமுடி, முகம், சிரிக்கும் அழகு எனது தந்தை எம் ஆர் ராதா உடைய தலைமுடி, முகம், சிரிக்கும் அழகு ஒரே மாதிரி இருக்கும். இதுவும் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் லட்சுமி காந்தன் கொலை வழக்கிற்காக ஜெயிலுக்கு சென்றவர், அதேபோல் எனது தந்தையும் 52 தடவை ஜெயிலுக்கு சென்று இருக்கிறார். ஒருமுறை எம்ஜிஆரை சுட்டதற்காக ஜெயிலுக்கு சென்றார்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇