நவம்பர் 3-ல் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 14 2017]

தமிழக அரசின் கேளிக்கை வரி 10 சதவிகிதத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது. இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய விழித்திரு, சோலோ போன்ற படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன

இந்த நிலையில் தற்போது கேளிக்கை வரி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்து பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட படங்கள் மட்டும் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 

கேளிக்கை வரி விதிப்பு பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்கு இணங்கி அக்டோபர் 6 ம் தேதி வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்ட படங்கள் மட்டும் வருகிற நவம்பர் 3 ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது இதற்கு திரைத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் மற்ற சகோதர தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பின்படி நவம்பர் 3ஆம் தேதி 'விழித்திரு', 'சோலோ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
 

More News

மெர்சல் சென்சார் சான்றிதழில் திடீர் சிக்கலா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்சாருக்கு சென்று 'யூ/ஏ சான்றிதழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

ஆபாச வீடியோ குறித்த விழிப்புணர்வு திரைப்படம்: ஹரி உதவியாளர் பேட்டி

இயக்குனர் ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் சஜோசுந்தர் இயக்கியுள்ள திரைப்படம் 'X வீடியோ

நடிகர் சந்தானம் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பிரபல நடிகர் சந்தானம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்

மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே தினத்தில் சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட ஒருசில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஷால் அதிரடி அறிவிப்பு எதிரொலி: திரையரங்க உரிமையாளர்கள் அவசர கூட்டம்

திரையரங்கு கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவை காரணமாக திரைப்படம் பார்க்க வரும் பாமர ரசிகர்கள் ஒரு படம் பார்க்க நபர் ஒன்றுக்கு ரூ.300க்கும் மேல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.