எனக்கு தீபாவளி நவம்பர் 25 தாண்டா: 'மாநாடு' நடிகரின் வைரல் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் ’எனக்கு நவம்பர் 25 தாண்டா தீபாவளி’ என டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பின்னர் திடீரென நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அறிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: ‘மாநாடு’ படத்தில் என்னுடைய பகுதியின் டப்பிங் பணியை எட்டு நாட்களில் முடித்துவிட்டேன். அதில் 5 நாட்கள் என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை ஆகியவை மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி விட்டது. ஆனால் படத்தில் என்னுடைய பகுதியை பார்த்ததும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது. உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்கிறேன், ‘எனக்கு தீபாவளி நவம்பர் 25 தாண்டா’ என்று பதிவு செய்துள்ளார்.
‘மாநாடு’ வெளியாகும் நாள் தான் தனக்கு தீபாவளி என பதிவு செய்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
I almost covered 8days dubbing work of mypart for “MAANAADU”,in 5 https://t.co/a16iyxQQZQ naadi,narambu,neck,back,spine and throat are gone& begging me to give minimum10days rest(heavy work-valli pinnudhu)BUTafter seeing the out-put , tell U all one thing DIWALI NOV25TH THANDA??
— S J Suryah (@iam_SJSuryah) October 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments