பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு 5 ஆண்டு சிறையா? கலக்கத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா நாட்டின் விசா தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் ஜோகோவிச் ஒருவேளை தவறான ஆவணங்களை சமர்ப்பித்து இருந்தால் அவருக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் வரும் 17 ஆம் தேதி துவங்கும் ஒபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது ஜோகோவிச் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை எனக் கூறி ஆஸ்திரேலிய அரசாங்கம் அவருடைய விசாவை ரத்து செய்தது.
இதனால் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ எனப் பயந்த ஜோகோவிச் தனக்கு கடந்த டிசம்பர் 2021 இல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குறைந்தது 6 மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது போன்ற மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்து ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். இதனால் ஜோகோவிச்சின் விசா ரத்து ஆணையை நீக்கிய ஆஸ்திரேலிய நீதிமன்றம் அவரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கும்படி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் சட்டப்போராட்டத்தில் ஜோகோவிச் வெற்றிப்பெற்றதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜோகோவிச்சுக்கு உண்மையிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகக் கூறியுள்ள சமயத்தில் அவர் வேறு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறாரா? என்பது போன்ற கோணங்களில் தற்போது ஆஸ்திரேலியா அரசாங்கம் விசாரணையை துவங்கியுள்ளது.
இந்த விசாரணையில் ஜோகோவிச் மாட்டிக்கொள்வாரோ என்ற பதற்றம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. காரணம் ஸ்பெயினில் இருந்து ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு அவர் கடந்த கிறிஸ்துவமஸ் தினத்தில் பெல்கிரேடில் இருந்ததை சமூக ஊடகங்கள் தற்போது அம்பலப்படுத்தி இருக்கின்றன.
இதனால் ஜோகோவிச் விசா தொடர்பாகத் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டார் என்றும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி விசா பெறுவதற்கு அவர் முயற்சித்தார் என்றும் கூறப்படுகின்றன. உண்மையில் இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஜோகோவிச்சுக்கு குறைந்தது 3-5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கலாம் அல்லது 3 வருடங்கள் ஆஸ்திரேலியா வர முடியாதபடி தடை விதிக்கலாம் என்பது போன்ற கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
இயற்கை மருத்துவத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் விசா நடைமுறையில் தற்போது கடும் சிக்கலை சந்தித்து இருக்கிறார். ஒருவேளை அவர் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து இருந்து அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜோகோவிச் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் கூறப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments