பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பரவியதாக தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜோகோவிச் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அதேபோல் ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவருடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவிக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமலேயே திடீரென கொரோனா தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஜோகோவிச் இதுகுறித்து கூறிய போது தனக்கு எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும், ஆனால் இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலினா, கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஒரு மில்லியன் யூரோ நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#NovakDjokovic and his wife Jelena tested positive for #coronavirus. pic.twitter.com/Dv3rwsyg2r
— Lokesh (@LokeshJey) June 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com