பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு: மனைவிக்கும் பரவியதாக தகவல் 

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜோகோவிச் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அதேபோல் ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவருடைய குழந்தைகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவிக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமலேயே திடீரென கொரோனா தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ஜோகோவிச் இதுகுறித்து கூறிய போது தனக்கு எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும், ஆனால் இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன்பின் ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலினா, கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஒரு மில்லியன் யூரோ நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

8 வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவிட்டை டெலிட் செய்த அக்சயகுமார்: ஏன் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் எட்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவீட் ஒன்றை தற்போது டெலிட் செய்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

பிறந்த நாள் விழாவில் பிரியாணியும் கொரோனாவும் பரிமாறிய அரசியல் பிரமுகர்

அரசியல் பிரமுகர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவில் பிரியாணியை மட்டுமின்றி கொரோனாவையும் சேர்த்து பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பேருந்தில் இருந்து திடீரென இறங்கி அலறியடித்து ஓடிய பயணிகள்: கொரோனா படுத்தும்பாடு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேருந்தில் பயணம் செய்ததை அறிந்ததும் அந்த பேருந்தில் என்ற சக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா இருப்பதாக கூறிய டாக்டரை இரும்புக்கம்பியால் அடித்த நபர்: அதிர்ச்சி தகவல்

தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா இருப்பதாக கூறிய டாக்டர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்த நபர் ஒருவரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

7 நாட்களில் கொரோனா பறந்துவிடும்: பாபா ராம்தேவின் புதிய ஆயுர்வேதிக் மருந்து!!!

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல கொரோனா சிகிச்சைக்கே இறுதியான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படாமல் உலக மக்கள் திண்டாடி வருகின்றனர்.