'லியோ' டிரைலர் வெளியிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.. சென்சார் போர்டு அதிரடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது என்பதும், யூடியூபில் வெளியான இந்த ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த ட்ரைலரில் ஒரு ஆபாச வார்த்தை இருந்ததால் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் யூடியூபில் ’லியோ’ டிரைலர் வெளியிடப்பட்டதால் இந்த ட்ரெய்லர் சென்சார் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ட்ரைலரை சென்னையில் உள்ள திரையரங்கம் உள்பட தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
சென்சார் செய்யப்படாத ஒரு திரைப்படத்தை அல்லது ட்ரைலரை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் அதை மீறி சென்சார் செய்யப்படாத லியோ ட்ரெய்லரை எப்படி நீங்கள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரையரங்குகளில் திரையிடலாம் என சென்சார் போர்டு சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்சார் செய்யப்படாத ட்ரைலரை வெளியிட்ட உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் சென்சார் போர்டு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் என்ன விளக்கம் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout