தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட விவகாரம்: விஷாலின் அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒருசிலர் பூட்டு போட்ட விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் உள்பட 29 பேருக்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது அதிருப்தி தெரிவித்து டிசம்பர் 19ஆம் தேதி அதிருப்தியாளர்கள் சிலர் சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டுப் போட்டனர். பூட்டு போட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போலீசார் பூட்டை அகற்ற முயன்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை கைது செய்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு உடைக்கப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு 29 பேருக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசுக்கு 15 நாட்களில் சம்மந்தப்பட்டவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும், பதில் வராத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

More News

திருவாரூர் திமுக வேட்பாளராக பிரபல நடிகர்?

திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது

'ஓவியா' பட டிசரை வெளியிட்ட கே.பாக்யராஜ்

இயக்குனர் கே.பாக்யராஜ் விரைவில் வெளிவரவுள்ள த்ரில் திரைப்படமான 'ஓவியா' என்ற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஓவியாவின் கேரக்டர் இதுதான்!

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் நடித்து வரும் 'ராஜபீமா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியா நடித்து வருகிறார் என்பதும், இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பதும் தெரிந்ததே

விஜயகாந்துடன் அஜித்தை ஒப்பிட்ட ஜோதிகா! ஏன் தெரியுமா?

இந்த உலகமே விளம்பரமயமாகிவிட்ட நிலையில் அரிதிலும் அரிதாக ஒருசிலரே தாங்கள் செய்யும் உதவியை கூட விளம்பரம் செய்யாமல் இருக்கும் குணம் கொண்டவர்களாக உள்ளனர்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட நாயகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் 'கனா', 'சீதக்காதி', 'அடங்கமறு', 'மாரி 2' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என ஐந்து தமிழ் திரைப்படங்கள் வெளியானது தெரிந்ததே