அர்ஜூன் ரெட்டி நாயகனின் தமிழ்ப்பட தலைப்பு அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ்ப்படத்தை 'இருமுகன்' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'நோட்டா'. இந்த படத்தின் தலைப்பில் இருந்தே இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதை யூகிக்க முடிகிறது.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஜிதா நடிக்கவுள்ளார். இவர் சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' பட நாயகி என்பது குறிப்பிடத்தக்கது

'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையில் சாந்தாகிருஷ்ணன் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

தமிழக அரசை விட 3 லட்சம் அதிகம்: கமல் அதிரடி அறிவிப்பு

திருச்சி அருகேயுள்ள திருவெறும்பூரில் நேற்று இரவு போக்குவரத்து காவல்துறை அதிகாரி காமராஜ் என்பவரால் எட்டி உதைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த உஷா

ஆணும் பெண்ணும் சமமல்ல: விராத் கோஹ்லியின் மகளிர் தின வீடியோ

இன்று உலகம் முழுவதும் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்: தியேட்டர் அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு, க்யூப் மற்றும் யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் திரைத்துறையினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த

நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது: மாணவர்கள் முன் கமல் உரை

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் அவ்வப்போது உரையாடல் நடத்தி வருகிறார்.

எச்.ராஜாவை கடவுள் ஆசிர்வாதிக்கட்டும்: விஷால்

தந்தை பெரியார் சிலை குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக்கில் கூறிய கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக கடும் கண்டனங்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த நிலையில்