'நோட்டா' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

'அர்ஜூன்ரெட்டி' , 'கீதா கோவிந்தம்', நடிகையர் திலகம்' போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்குக் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் உறுதியாகியுள்ளது.

இந்த படத்திற்கு தான் 'யூ' சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இதனாஇ சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

விஜய்தேவரகொண்டா, மெஹ்ரீன், யாஷிகா, நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'நோட்டா' திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.,

More News

கள்ளக்காதல் குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

திருமணத்திற்கு பின்னர் 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது

மறுபடியும் முதல்ல இருந்தா? பிக்பாஸ் வீட்டில் 16 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் திட்டமிட்டபடி 100 நாட்களிலேயே முடித்திருக்கலாம். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சம்பவங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டது.

நிஜ சந்திரனை அவர்கள் பார்த்தது கிடையாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கமல் பதில்

தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றுவதாகவும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல புதிய கட்சிகள் அதிகபட்சம் நான்கு அமாவாசைகள் தாண்டாது என்றும் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்

வனிதா விஜயகுமாருடன் நெருக்கம் குறித்து நடன இயக்குனர் ராபர்ட் விளக்கம்

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பங்களாவை வாடகை விட்ட விவகாரம் குறித்து பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு