'துணிவு'க்கு முன்பே ஸ்கைடைவிங் செய்து விளம்பரம் செய்யப்பட்ட தமிழ்ப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டரை துபாயில் ஸ்கை டைவிங் மூலம் பாராசூட்டிலிருந்து குதித்து வெளியிடப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு படத்தை ஸ்கை டைவிங் மூலம் விளம்பரம் செய்வதாகவும் அறிவித்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிபிடத்தக்கது.
ஆனால் நெட்டிசன்கள் ’துணிவு’ படத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ படம் ஸ்கை டைவிங் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது என ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் அதே துபாயில் ஸ்கை டைவிங் மூலம் பிரம்மாண்டமான போஸ்டர் ஸ்கை டைவிங் மூலம் வெளியானது என்பதை நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து ’துணிவு’ படத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் நடித்த ’2.0’ படத்தில் ஸ்கை டைவிங் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என தெரியவருகிறது.
Going the AK way! ?? For the 1st time ever, an announcement like never seen before for a Kollywood film ??
— Lyca Productions (@LycaProductions) December 26, 2022
Watch this space as we are coming with an exciting update for 31st Dec 22! We call it the #ThunivuDay ??#AjithKumar ?? #THUNIVU ?? #NoGutsNoGlory ????✨ #ThunivuPongal pic.twitter.com/l4GGlv1nk3
2.0 is the first SKY DIVE for a kollywood film#AjithKumar fans mentioning it first needs to be changed #Thalaivar #Rajinikanth #Jailer pic.twitter.com/SmjnRew8od
— Vicky Creatives ᴶᴬᴵᴸᴱᴿ (@vicky_creatives) December 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments