லோகேஷின் அடுத்த படத்தில் கமலும் இல்லை, ரஜினியும் இல்லை, இந்த பிரபலம் தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தை முடித்தவுடன் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை ரஜினிகாந்தும் சேர்ந்து தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி மைத்திரி மூவி பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக ஒரு திரைப்படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இதில் சல்மான் கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் உலக அளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்றும் லோகேஷ் இடம் இந்த படத்தின் கதையை கேட்டு ஆச்சரியமடைந்த சல்மான்கான் உடனடியாக ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் மூலம் உலக அளவில் பேசப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments