இந்த சீசன் இரண்டு வீடுகள் மட்டுமல்ல, இதுவும் இரண்டு தான்.. களைகட்டும் பிக்பாஸ்..!

  • IndiaGlitz, [Thursday,August 31 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 7வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனின் இரண்டு புரமோ வீடியோ வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பதும் அதுமட்டுமின்றி இந்த சீசனில் இரண்டு வீடுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தான் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த சீசனில் இரண்டு வீடுகள் மட்டும் இன்றி இரண்டு பிக்பாஸ் குரல்கள் ஒலிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆறு சீசன்களில் பிக்பாஸ் ஆண் குரலாக இருந்த நிலையில் தற்போது ஒரு ஆண் பிக்பாஸ் குரல் மற்றும் ஒரு பெண் பிக்பாஸ் குரல் இருக்கும் என்றும் இரண்டு வீடுகளில் உள்ள போட்டியாளர்களிடம் இந்த இரண்டு பிக்பாஸ் குரல்கள் தனித்தனியாக ஒலிக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் என்னென்ன மாற்றங்கள் இந்த சீசனில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் என விஜய் டிவி ஜாக்குலின், இரவின் நிழல் நடிகை ரேகா நாயர், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் பிருத்விராஜ், கோவை டிரைவர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உட்பட ஒரு சிலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாகாபா, ஓவியாவும் பிக்பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

More News

பிரமாண்டத்தின் உச்சம்.. பிரமிக்கும் ஆக்சன் காட்சிகள்: அட்லியின் 'ஜவான்' டிரைலர்..!

 ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது

சிலந்தி வலையை அறுக்க சிங்கங்கள் வாழாது.. கவினின் 'ஸ்டார்' படத்தின் செம்ம வீடியோ..!

நடிகர் கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இன்ஸ்டாவுக்கு அதிரடியாக வந்த நயன்.. முதல்முறையாக குழந்தைகளுடன் செம்ம ஸ்டைல்..!

நடிகை நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் இல்லாத நிலையில் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். இதில் அவர் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை

எந்த ஒரு விஜய் ரசிகனும் கொடுத்த வாக்கை மீறமாட்டான்: 'ஜவான்' விழாவில் அட்லீ..!

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் 'ஜவான்' திரைப்படத்தின் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்னை பழி வாங்கலாம், ஆனால் அதை மட்டும் உங்களால் செய்ய முடியாது: விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் பதிலடி..!

ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் ஷாருக்கான் கலகலப்பாக பேசினார்.