தமன்னா- ராஷிகண்ணா மட்டுமல்ல.. 2 சீனியர் நடிகைகளின் செம்ம ஆட்டம் .. 'அரண்மனை 4' கலக்கல் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,March 30 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கலர்ஃபுல் ஸ்டில்களில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா செம கிளாமரில் இருக்கும் காட்சி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமன்னா, ராஷி கண்ணா மட்டும் இன்றி இரண்டு சீனியர் நடிகைகளான குஷ்பு மற்றும் சிம்ரனும் ஒரு பாடலுக்கு செம டான்ஸ் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஷ்பு, சிம்ரன் பாடல் , படம் முடியும்போது டைட்டில் காண்பிக்கும் போது இடம்பெற்றுள்ளதாகவும் இந்த பாடலை புரமோஷன் பாடலாகவும் பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, கேஎஸ் ரவிகுமார், விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

இறந்த பின்னரும் செய்த உதவி.. பிரபல நடிகரின் நெருங்கிய உறவினர்.. டேனியல் பாலாஜி குறித்த சில தகவல்கள்..!

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும்

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்.. 48 வயதில் நடந்த சோகம்.. என்ன ஆச்சு?

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மறைந்த நடிகர்  டேனியல்  பாலாஜிக்கு வயது 48

'ஆடுஜீவிதம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை எப்போது நெருங்கும்?

பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான 'ஆடுஜீவிதம்' திரைப்படம் நேற்று வெளியாகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார்.. யூடியூபரின் சர்ச்சை பதிவு..!

பிரபல யூடியூபர் ஒருவர் மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார் என்று பதிவு செய்திருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஜினி - லோகேஷ் படத்தின் அட்டகாசமான ஸ்டில்.. 'கோட்' தயாரிப்பாளரின் கமெண்ட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இயக்கம் 'தலைவர் 171' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்