பாடல்கள் மட்டுமல்ல, இந்த ரெண்டும் கிடையாது: 'தளபதி 67' படத்தில் சம்பவம் செய்யும் லோகேஷ்!

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தின் செய்திகளை விட தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

’தளபதி 67’ படம் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன என்பதும், குறிப்பாக இந்த படத்தில் ஆறு வில்லன்கள் இருப்பதாகவும், அவர்களில் கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரித்விராஜ் மற்றும் ஆக்சன்கிங் அர்ஜூன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் சமந்தா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி இந்த படத்தில் பாடல்களே இல்லை என்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தான் படம் முழுவதும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ’தளபதி 67’ படத்தில் சமந்தா மற்றும் த்ரிஷா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் விஜய்க்கு ஜோடி யாரும் கிடையாது என்றும் கூறப்பட்டு வருகிறது. இதுவரை விஜய் நடித்த படங்களில் ஜோடி இல்லாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விஜய்யின் அனைத்து படங்களில் இருக்கும் பஞ்ச் வசனங்களும் இந்த படத்தில் கிடையாது என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் செய்திகள் வெளி வருவதை பார்க்கும் போது இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்ய காத்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 

More News

8வது உலக அதிசயம் நீங்கள்தான்: தேசிய விருது பெற்ற நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் எட்டாவது உலக அதிசயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ரயிலில் கார்டு ஆக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சும்மாவே கிளாமர் தூக்கலா இருக்கும், பிகினியில கேக்கணுமா? யாஷிகாவின் வைரல் வீடியோ!

 தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின்

'வெந்து தணிந்தது காடு' ஆடியோ விழாவில் இத்தனை பிரமாண்டமா?

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.