சிங்கிள் பாடல் மட்டுமல்ல.. இன்னொரு ட்விஸ்டும் இருக்குது.. 'கோட்' ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

தளபதி விஜயின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருப்பதை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ‘கோட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி ஆகிய இருவரும் பாடியுள்ளனர் என்ற தகவல் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாளை ‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் மட்டுமல்ல, இன்னொரு ட்விஸ்ட்டும் உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ‘கோட்’ படத்தின் 49 வினாடி டீசர் வீடியோவும் நாளை வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த டீசர் சென்சார் தகவல் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தின் மூலம் ‘கோட்’ படத்தின் டீசர் 49 வினாடிகள் கொண்டதாக உள்ளது என்று தெரியவந்துள்ளதை அடுத்து நாளை ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருக்கிறது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘கோட்’ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் இப்போது முதல் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகும் நிலையில் டீசரும் வெளியாவதை அடுத்து இசை வெளியீடு, டிரைலர் என அடுத்தடுத்து பல அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.