பணமூட்டையில் இருந்த 3 லட்சம் மட்டுமல்ல.. பெரிய தொகையை தட்டி தூக்கிய பிக்பாஸ் போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பணமூட்டை அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் ஆரம்பகட்ட விலையான மூன்று லட்சம் என்ற பணமூட்டையை எடுத்துக் கொண்டு செல்லும் போட்டியாளர் யாராக இருக்கும் என்ற கணிப்பு பார்வையாளர்கள் மத்தியில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.
ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய மூவரில் ஒருவர் டைட்டில் வின்னர் பட்டம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் இவர்கள் மூவரும் பணமூட்டையை எடுக்க வாய்ப்பே இல்லை என கணிக்கப்பட்டது. மேலும் மைனா பணமூட்டையை எடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதால் அமுதவாணன், கதிரவன் ஆகிய இருவரில் ஒருவர் பணமூட்டையை எடுப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.
அந்த கணிப்பின்படி நேற்று ஆரம்ப விலையான மூன்று லட்சம் என்று இருந்தபோதே கதிரவன் பணமுட்டையை தட்டி தூக்கி விட்டார். இதனை அடுத்து அவர் நேற்று பணமூட்டையுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதிரவன் 100 நாட்கள் இருந்ததை அடுத்து அவருக்கு தினமும் ரூ.20 ஆயிரம் சம்பளம் என்பதால் அவருக்கு மொத்தம் ரூ. 20 லட்சம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணமூட்டையில் கிடைத்த மூன்று லட்சத்தையும் சேர்த்து மொத்தம் 23 லட்சத்துடன் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டம் பெறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணத்தை பெறுபவர் யார் என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
What a shame this guy has been to #BiggBossTamil6 #VJKathir
— Ajay Ashok🅰️🅰️ (@AjayAsho) January 17, 2023
Never knew how to play this game.
Fakest dumbest spineless finalist to have ever featured in #BiggBossTamil history is defintely #VJKathiravan 🤦♂️pic.twitter.com/RHT9U6ks3v
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments