ரிலீஸில் மட்டுமல்ல, புரமோஷனிலும் மோதும் 'துணிவு - வாரிசு'?

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ’ஜில்லா’ ‘வீரம்’ படங்களை அடுத்து இரு பிரபலங்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.

அஜித், விஜய் ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் இரண்டு திரைப்படங்களுக்கும் தியேட்டர்கள் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜீத், விஜய் படங்கள் ரிலீஸ் தேதியில் தான் மோதுகின்றன என்றால் அதற்கு முன்பே புரமோஷனிலும் மோத இருப்பதாக தெரிகிறது. அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் சில்லா சில்லா என்ற பாடல் வரும் நவம்பர் 14 அல்லது 16 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் நவம்பர் 16-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இரண்டு படங்களின் பாடல்களும் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு பாடல்களையும் பாடியது அனிருத் என்பதும் ஒரு அபூர்வ ஒற்றுமை ஆகும்.

More News

நீங்க முதல்ல ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. பிக்பாஸையே மிரட்டிய தனலட்சுமி

பிக்பாஸ் போட்டியாளர்கள் இதுவரை சக போட்டியாளர்களை மிரட்டுவதை மட்டுமே பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸையே மிரட்டி உள்ள சம்பவம்

சன்னிலியோன் - தர்ஷா குப்தாவை ஒப்பிட்ட சதீஷ்: 

அவங்க சொல்ல சொன்னாங்க சொன்னேன்: சன்னிலியோன் - தர்ஷா குப்தா சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சதீஷ்

LCU-வில் இணைகிறாரா தல? லோகேஷ் கனகராஜ் சூப்பர் தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவரை ரசிகர்கள் 'லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்' என்ற LCU பட்டத்தை அளித்து

லைகா நிறுவனத்தின் அடுத்த படம் இதுதான்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

'துணிவு' திரைப்படத்தில் அஜித் பாட்டு பாடியிருக்கின்றாரா?

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக 'வாரிசு' திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்