close
Choose your channels

இந்த வாரம் ஒன்றல்ல.. இரண்டு எலிமினேஷன்.. யார் யார் வெளியேறினார்கள்?

Sunday, December 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது ரவீனா என்ற தகவல் வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இன்ப அதிர்ச்சியாக இன்னொரு போட்டியாளர் வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா, நிக்சன் மற்றும் மாயா ஆகிய 7 பேர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் அவர்களில் மாயா தான் குறைந்த வாக்குகள் பெற்றதாக அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்தன.

ஆனால் ரவீனா தான் குறைந்த வாக்குகள் பெற்றதாகவும் அவர்தான் வெளியேற போவதாகவும் தகவல் வெளியானது. இது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வாரம் இரண்டு எவிக்சன் என்றும் ரவீனா மட்டுமின்றி நிக்சனும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரவீனா, நிக்சன் ஆகிய இருவரும் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்டு காட்டியவர்கள் என்பதால் இருவரும் வெளியேற்றப்படுவது பார்வையாளர்களுக்கும் பிரதீப் ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment