close
Choose your channels

ரஜினியை மட்டுமல்ல, இன்னொரு விவிஐபியையும் சந்திக்கும் விஜய்? தரமான சம்பவம் இருக்குது..!

Thursday, March 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்ல இருப்பதாகவும் இதனை அடுத்து ரஜினி - விஜய் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய், ரஜினியை மட்டுமல்ல இன்னொரு மிகப்பெரிய விவிஐபியையும் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது, அவர்தான் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் என்று கூறப்படுகிறது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் விஜய் சந்திப்பு வெகு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு நடந்தால் கேரள ஊடகங்களில் மட்டும் இன்றி தமிழக ஊடகங்களில் இது தலைப்பு செய்தியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் விஜய், புதுவையில் படப்பிடிப்பு நடந்த போது புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்துள்ளார் என்பதும் அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவரையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலமுறை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்திருக்கும் விஜய், தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment