close
Choose your channels

'கல்கி 2898 ஏடி'.. கமல் மட்டுமல்ல.. சிறப்பு தோற்றத்தில் 5 பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தால் போல் முதல் காட்சி பார்த்தவர்கள் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருப்பதால் இந்த படம் ஒரு வெற்றி படமாக தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்பட்டாலும் முதல் பாகத்தில் 19 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என்றும் அதாவது அவருடைய கேரக்டர் கிட்டத்தட்ட சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கேரக்டர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று படத்தை பார்த்தவர்கள் மேலும் 5 பிரபலங்கள் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறி இருப்பது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நானி, நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகிய 5 பிரபலங்கள் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் அவர்களது காட்சியும் படத்தின் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஐந்து தென்னிந்திய பிரபலங்கள் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களின் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.