அஜித், விஜய் மட்டுமல்ல, சூர்யா ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்து?

வரும் பொங்கல் திருநாளில் அஜீத்தின் 'துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொங்கல் விருந்தாக இந்த படங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜீத், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் சூர்யாவின் ’சூர்யா 42’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே வரும் பொங்கல் திருநாள் அஜித் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சூர்யா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கோவாவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதன் பின்னர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 4 கேரக்டர்களில் சூர்யா நடிக்கவுள்ளார். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.