மீடூ விவகாரம், ஆண்கள் மட்டும் காரணமில்லை: பிக்பாஸ் விஜயலட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் மீடூ விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகையுமான விஜயலட்சுமி 'மீடூ விவகாரத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது' என்று கூறியுள்ளார்.
சினிமாத்துறை என்பது மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் 'கொடுக்கல் என்ற ஒன்று இருக்கும்போது எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த மாதிரி ஆரம்பித்த விஷம் தான் இது. அதே நேரத்தில் இது இரண்டு தரப்பிலும் சம்மதத்துடன் நடக்கும் ஒரு விஷயம் ஆகும். முதல் நாளிலேயே ஒரு பெண் இதற்கு உடன்படாமல் இருந்திருந்தால் இந்த விஷயம் வளர்ந்திருக்காது. ஒரு பெண் ஓகே சொல்லும்போது அதையே மற்ற பெண்களிடமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. எனவே கொடுக்க ஒருவர் தயாராக இருந்தால் அதை ஏற்க இன்னொருவர் தயாராகத்தான் இருப்பார்.
இந்த விவகாரத்தில் யாரும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுவதில்லை. சம்மதம் இருப்பவர்கள் ஒத்துழைக்கின்றனர், சம்மதம் இல்லாதவர்கள் வேறு துறைக்கு சென்றுவிடுகின்றனர். எனவே மீடூ பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவரவர் எடுக்கும் முடிவில்தால் உள்ளது' என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com