close
Choose your channels

எச்.வினோத் அடுத்த படத்தில் கமலும் இல்லை, கார்த்தியும் இல்லை.. இவர் தான் ஹீரோ..!

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எச் வினோத் இயக்கத்தில் உருவான ’துணிவு’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆனபோதிலும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படத்தை எச் வினோத் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது

இதன் பின்னர் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் கார்த்தி தற்போது சில படங்களில் பிஸியாக இருப்பதால் உடனடியாக இந்த படத்திற்கு வர முடியவில்லை.

இதனை அடுத்து கமல்ஹாசன், கார்த்தி படங்களை பின்னர் இயக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்த எச் வினோத் தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் நையாண்டி உடன் கூடிய காமெடி படமாக இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் அல்லது கார்த்தி படத்தை அவர் இயக்குனர் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment