பூமியில் மட்டுமல்ல; சூரியனிலும் லாக்டவுன்தான்!!! கடும் எச்சரிக்கை விடுக்கும் நாசா!!!
- IndiaGlitz, [Monday,May 18 2020]
கொரோனா பாதிப்பினால் உலகமே தலைகீழாக மாற்றப்பட்டு இருக்கிறது. பொருளாதார சீரழிவு, பசி, பட்டிணி, வறுமை, வேலையின்மை போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தற்போது புதிய பூதத்தை கிளப்பி இருக்கிறது நாசா விண்வெளி மையம். இன்னும் கொரோனா லாக்டவுனே முடிவுக்கு வராத நிலையில் அடுத்து சூரியனில் லான்-டவுன் வரப்போகிறது என்ற தகவல்தான் அந்த புதிய பூதம்.
ஆஹா, சூரியனே லாக்டவுனில் இருந்தால் வெயில் அடிக்காது, நிம்மதியாக இருக்கலாம் என்று சந்தோஷ பட்டு விடாதீர்கள். சூரியன் லாக்டவுனில் இருந்தால் நிலநடுக்கம், கடும் மின்னல் வெட்டு, கடல் கொந்தளிப்பு, உணவு பஞ்சம், விவசாய பாதிப்பு, கடும் பனிப்பொழிவு போன்ற பல பாதிப்புகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் அதன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரியனில் பல “சன் ஸ்பாட்கள்” உண்டு. சூரியன் இந்த பகுதியில் இருந்துதான் அதிக வெப்பத்தை வெளியிடுகின்றன. எத்தனை “சன் ஸ்பாட்கள்” சூரியனில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அது வெளியிடும் வெப்பநிலையும் மாறுபடும். “சன் ஸ்பாட்கள்” குறையும் போது பூமியிலும் குறைவாக வெப்பநிலை உணரப்படுகிறது. 2014 இல் சூரியனில் அதிக “சன் ஸ்பாட்கள்” தோன்றியதால் உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை ஏற்பட்டு கடும் அழிவுகளை சந்திக்க வேண்டி வந்தது. இந்நிலையில் இந்த “சன் ஸ்பாட்கள்” குறைந்தது 11 வருடங்களுக்கு ஒரு முறை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் என்ற தகவலை நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதாவது 11 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனில் இருக்கும் பெரும்பலான “சன் ஸ்பாட்கள்” தனது வெப்ப நிலையை குறைத்துக் கொள்கிறது. அதை ஈடு செய்யும் விதமாக புதிய “சன் ஸ்பாட்கள்” சூரியனில் தோன்றும். புதிய “சன் ஸ்பாட்கள்” தோன்றுவரை சூரியனில் இருந்து வெளியிடப்படும் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். சூரியனில் உள்ள “சன் ஸ்பாட்கள்” அனைத்தும் வலுவிழந்து போகும் போது அது வெளியிடும் வெப்பநிலையும் குறைவாக இருக்கும். இந்த தன்மைக்கு பெயர் Solar Minumum எனப்படுகிறது. தற்போது ஏற்பட இருக்கும் Solar Minumum பாதிப்பினால் பூமியில் அதிக இயற்கை பேரிடர்கள் நிகழப்போவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மின்னல் வெட்டுகள் அதிகமாக இருக்கும் என்றும் அது விண்வெளி வீரர்களுக்கு கடும் பாதிப்பாக மாறும் எனவும் கூறப்படுகிறது.
திடீரென்று பூமியில் 2 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை குறையும் போது அதன் விளைவும் கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் குளிர், பனிப்பொழிவு, சாடிலைட்டு இயக்கங்களில் பாதிப்பு, விவசாய பாதிப்பு, உணவு பஞ்சம், உணவுப் பொருட்களின் உற்பத்திக் குறைவு, வறுமை, நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு போன்ற பேரிடர்கள் தோன்றும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் வெளிப்படுத்தி இருக்கின்றனர். 1816 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்பநிலை குறைவினால் பூமியில் கடுமையான பனிப்பொழிவு இருந்தாகவும் கூறப்படுகிறது. 1815 இல் இதன் தாக்கத்தினால் இந்தோனேசியாவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு 710 உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
1790, 1830 களில் ஏற்பட்ட வெப்பநிலை குறைவினால் வறுமை, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற பல பேரிடர்கள் ஏற்பட்டதாகவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா ஒருபக்கம் உலகையே சூறையாடி வரும் நிலையில் அடுத்து சூரியனின் கதிர்வீச்சுகள் குறைவாக இருக்கும் என்ற பேரிடியை உலகம் எப்படி சமாளிக்க போகிறது என பயம் பலரையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறது.