கிலுஜோசப்: தபால் தலைக்கு தோன்றாத எதிர்ப்பு தாய்ப்பாலுக்கு மட்டும் ஏன்?
- IndiaGlitz, [Saturday,March 10 2018]
சமீபத்தில் மலையாள இதழ் ஒன்றில் நடிகை கிலுஜோசப் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற அட்டைப்படம் வெளியாகியிருந்தது. இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்களும், கடுமையான விமர்சனங்களும் மாறி மாறி கிடைத்தன. இதுகுறித்து கிலுஜோசப் கூறியபோது, 'இந்தா புகைப்படத்திற்கு நிறைய எதிர்வினை வருமென்று எனக்கு தெரியும். ஆனால், சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காக நான் அவ்வாறாக போஸ் கொடுத்தேன். என்று கூறினார்.
இந்த அட்டைப்படம் வெளிவந்த பின்னரே யார் இந்த கிலுஜோசப் என்று பலர் இணையதளங்களில் தேட ஆரம்பித்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் பிறந்த கிலு ஜோசப், மாடலிங் செய்வதோடு ஃபிளை துபாய் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டராக பணிபுரிந்து வந்தார். 18 வயதிலெயே விமான பணிப்பெண் பணியில் சேர்ந்த இவருக்கு அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பும் வந்து கொண்டிருந்தது. நிவின் பால் நடித்த 'ஸ்வர்க ராஜ்யம் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி கிலுஜோசப் ஒரு நல்ல பாடலாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையாள திரைப்படங்களில் இவர் எழுதிய ஒருசில பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாடலிங், நடிகை, பாடலாசிரியர், விமான பணிப்பெண் என பலவிதங்களில் இவர் பணியாற்றினாலும் இவருடைய தாய்ப்பால் கொடுக்கும் ஒரே ஒரு போஸ் இவரை உலக பிரபலம் ஆக்கியது. கிலுஜோசப் கொடுத்த அதே தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் போன்று ஒரு ஒருதாய் தன்னுடைய குழந்தைக்க்கு பாலூட்டும் புகைப்படத்துடன் கூடிய ஒரு தபால் தலையை கடந்த 1984ஆம் ஆண்டு இந்திய தபால்துறை வெளியிட்டிருந்தது. ஆனால் அதற்கு நாடு முழுவதிலும் இருந்து எந்தவித எதிர்ப்பும் வெளிவரவில்லை. ஆனால் கிரகலட்சுமி என்ற இதழுக்காக கிலுஜோசப் கொடுத்த போஸ் மட்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த எதிர்ப்பு ஒரு நடிகை என்பதால் மட்டுமா? அல்லது வேறு காரணமா? என்பதை எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் விளக்க வேண்டும். இருப்பினும் கிலு ஜோசப்பின் தைரியமான போஸ் அதற்கு அவர் கொடுத்த போல்டான கருத்து பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.