மக்கள் மனதை வென்றவர் அசீமும் இல்ல, விக்ரமனும் இல்லை.. ஷிவின் தான்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான்கு நாட்கள் ஆகிய போதிலும் டைட்டில் வின்னர் குறித்த பிரச்சனை இன்னும் பார்வையாளர்கள் மத்தியில் தீரவில்லை. அசீம் டைட்டில் வின்னராக இருந்தாலும் மக்களின் ஆதரவு பெற்றவர் விக்ரமன்தான் என்றும் அவர் தான் உண்மையான டைட்டில் வின்னர் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மக்களின் மனதை வென்றவர் அசீமும் இல்லை, விக்ரமனும் இல்லை, ஷிவின் தான் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருவது மட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பெற்ற ஷிவினை திறந்த காரில் அவரது ரசிகர்கள் அழைத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷிவின் போஸ்டர்கள் பேனர்கள் கட்டப்பட்ட காரில் அவர் ரசிகர்களை நோக்கி கை அசைக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு தரும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 106 நாட்கள் தாக்குப்பிடித்து ஆண், பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒரு திருநங்கை போட்டியாளர் இறுதி போட்டியில் கலந்து கொண்டதே மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

More News

கடவுளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கடவுளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் விக்ரமன் தங்கையா இவர்? செம மாடர்னா இருக்காரே..!

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே.

இது வெறும் நன்றி தெரிவிக்கும் வீடியோ அல்ல.. பிக்பாஸ் விக்ரமனின் முக்கிய அறிவிப்பு!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது

மலேசியாவில் விபத்து.. மேஜர் ஆபரேசன்: இப்போது எப்படி இருக்கிறார் விஜய் ஆண்டனி?

 மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்த போது விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி தற்போது எப்படி இருக்கிறார் என்பதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

ஆஸ்கார் விருதை நெருங்கிய 'ஆர்.ஆர்.ஆர்' : வாழ்த்து தெரிவித்த இசைப்புயல்

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை நெருங்கி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் படக்குழுவினர்களுக்கு