AI இல்லை.. DeAging டெக்னாலஜி இல்லை.. இளமைக்கு இயல்பாக திரும்பிய அஜித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வயதான நடிகர்களின் இளமை தோற்றத்திற்கு DeAging டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அஜீத் எந்தவித டெக்னாலஜியும் இல்லாமல் இயல்பாக இளமைக்கு திரும்பிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் "விடாமுயற்சி" மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் "குட் பேட் அக்லி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் இளமை தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். AI மற்றும் DeAging டெக்னாலஜி உதவியில்லாமல் உடல் பருமனை குறைத்து, இளமை தோற்றத்திற்கு திரும்பிய அஜித்தின் இந்த புதிய தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
மேலும், இந்த பதிவில் ஆதிக் ரவிச்சந்திரன், "வாழ்நாளில் எனக்கு மறக்க முடியாத ஒரு வாய்ப்பை அஜீத் அவர்கள் கொடுத்துள்ளார். எனது கனவு நினைவாகிவிட்டது. அவருடைய அன்புக்கு ரொம்ப நன்றி. இன்று கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது; இது மிகவும் அழகான பயணம்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments