AI இல்லை.. DeAging டெக்னாலஜி இல்லை.. இளமைக்கு இயல்பாக திரும்பிய அஜித்..!

  • IndiaGlitz, [Sunday,December 15 2024]

வயதான நடிகர்களின் இளமை தோற்றத்திற்கு DeAging டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அஜீத் எந்தவித டெக்னாலஜியும் இல்லாமல் இயல்பாக இளமைக்கு திரும்பிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் இளமை தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். AI மற்றும் DeAging டெக்னாலஜி உதவியில்லாமல் உடல் பருமனை குறைத்து, இளமை தோற்றத்திற்கு திரும்பிய அஜித்தின் இந்த புதிய தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த பதிவில் ஆதிக் ரவிச்சந்திரன், வாழ்நாளில் எனக்கு மறக்க முடியாத ஒரு வாய்ப்பை அஜீத் அவர்கள் கொடுத்துள்ளார். எனது கனவு நினைவாகிவிட்டது. அவருடைய அன்புக்கு ரொம்ப நன்றி. இன்று கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது; இது மிகவும் அழகான பயணம். என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

அல்லு அர்ஜுனனுக்காக நான் அழவில்லை.. சமந்தா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், அவரை அவரது மனைவி கட்டி அணைத்து கண்ணீர் விட்ட வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்

முடிவுக்கு வந்தது சத்யாவின் பிக்பாஸ் பயணம்.. இன்னொரு எவிக்சன் உண்டா?

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் - சுகுமார் கூட்டணி.. சூப்பர் அறிவிப்பு..!

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு குழந்தை.. பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை தனக்கு குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தி, குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அறிவித்துள்ளார்.

நேற்றே ஜாமீன் கிடைத்தும் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன்.. என்ன காரணம்?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவருக்கு