கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது தென்கொரியா: எப்படி தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பெரும் ஆபத்தில் சிக்கி தவித்திருக்கும் நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா நோயாளிகளே இல்லை என தென்கொரியா அறிவித்துள்ளது. இவ்வளவிற்கும் இந்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸால் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்படி இருந்தும் தற்போது இந்நாடு கொரோனா இல்லாத நாடாக மாறியது எப்படி?
தென்கொரியாவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் பள்ளி கல்லூரிகள் மட்டுமே மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்குகள், மால்கள், கடைகள் உள்பட அனைத்தும் திறந்தே இருந்தன.
தென்கொரியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர்கள் பாதிக்கபப்ட்டு இருந்தாலும் அவர்களில் 5000 பேர் குணமாக்கப்பட்டு அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது முற்றிலும் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எப்படி சாத்தியமாகியது?
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டது மட்டுமின்றி எங்கெங்கெல்லாம் சென்றார்கள் என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கொரோனா நோயாளிகள் எங்கெங்கு சென்றார்கள், யார் யாரை எல்லாம் தொட்டார்கள் என்பதையும் கண்டுபிடித்து உடனடியாக அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் நவீன வசதிகள் மூலம் உடனுக்குடன் யார் யாருக்கு கொரோனா என்பதை உறுதி செய்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக தென்கொரிய பொதுமக்களும் அந்நாட்டின் அரசிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் அவர்களே அரசு மருத்துவமனைக்கு முன் வந்து தங்களை தாங்களே பரிசோதனை செய்து கொண்டனர். கொரோனா அறிகுறி இருந்தால் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு, அரசின் அதிரடி நடவடிக்கை, சிசிடிவி, ஜிபிஎஸ் போன்ற டெக்னாலஜியை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்தல் ஆகியவற்றால் தென் கொரியா தற்போது கொரோனா வைரஸ் இல்லாத நாடாக மாறியுள்ளது.
குறிப்பாக சீனாவில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் ஆரம்ப காலத்திலேயே அதாவது கடந்த ஜனவரி மாதத்திலேயே சீனாவின் எல்லையை தென்கொரியா மூடிவிட்டது என்பதும் சீனாவில் இருந்து சொந்த நாட்டினர் உள்பட யாரையும் தென்கொரியாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com