8 மணி நேரத்திற்குள் புதிய ரயில்பாலம்: இந்தியன் ரயில்வே சாதனை
- IndiaGlitz, [Saturday,January 06 2018]
வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இந்தியன் ரயில்வே வெறும் 8 மணி நேரத்திற்குள் ரயில்பாலம் ஒன்றை கட்டி புதிய சாதனை செய்துள்ளது
வடக்கு மண்டல ரயில்வே பகுதிக்கு உட்பட்ட லக்னௌ, சஹாரண்பூர் இடையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பழமையான பாலங்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய ஸ்டீல் பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புண்ட்கி, நாகினா இடையிலான ரயில் பாதையில் 100 ஆண்டுகால பழமையான ஒரு ரயில் பாலத்தை அகற்றி 7.30 மணி நேரத்தில் புதிய ரயில் பாதையை அமைத்து வடக்கு மண்டல ரயில்வே புதிய சாதனையை செய்துள்ளது. கிரேன், ஜேசிபி மற்றும் பொக்லேன் இயந்திரங்களின் உதவியுடன் புதிய ஸ்டீல் பாலத்தை ரயில்வே ஊழியர்கள் அமைத்துள்ளனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் வடக்கு மண்டல ரயில்வேத்துறை பொது மேலாளர் விஷ்வேஷ் சௌபே அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்
இதற்கு முன்னர் பிட்டோரா என்ற இடத்தில் வடக்கு மண்டல ரயில்வேத்துறையினர் 48 மீட்டர் நீளம் கொண்ட பாலம் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்டிருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.