அடுத்தடுத்து இரண்டு புயல்கள்; தமிழகதில் கனமழைக்கு வாய்ப்பு
- IndiaGlitz, [Monday,October 08 2018]
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் ஆகிய இரண்டு புயல்களால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், ஆனால் இந்த இரண்டு புயல்களும் தமிழகத்தில் கரையை கடக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள லூபன் என்ற புயல் ஓமனில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக உருவாகி வருகிறது. இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி ஒரிசா அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 10ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் என இரண்டு பக்கங்களிலும் புயல் ஏற்பட்ட போதிலும் இந்த இரண்டு புயல்களும் தமிழகத்தில் கரையை கடக்காது என்பதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது.