வடகொரியாவில் வெப் சீரிஸை பரப்பிய நபர்… கிம் என்ன செய்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவில் டிவி, இண்டர்நெட், திரைப்படங்கள் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இதுபோன்ற விஷயங்களை திருட்டுத்தனமாகப் பார்த்தால் அவர்களுக்கு மரணத்தண்டனைதான் கிடைக்கும் என்ற தகவலை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
உண்மையில் தற்போது Squid game எனும் வெப் சீரிஸை அந்நாட்டில் பரப்பிய இளைஞர் ஒருவருக்கு கொடூரமான மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் உலக நாடுகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதோடு கிம்மின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
வடகொரியா கல்லூரியில் படித்துவரும் இளைஞர் ஒருவர் சீனாவில் இருந்து திரும்பிவந்தபோது Squid game வெப் சீரியஸை தனது பென் டிரைவில் ஏற்றிவந்துள்ளார். மேலும் கல்லூரிக்கு வந்தவுடன் தனது நண்பர்களுக்கும் இந்த வெப் சீரியஸை பதிவேற்றிக் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வந்த நிலையில் அந்த இளைஞருக்கு Squid game – சீரிஸில் வருவதுபோன்றே சுட்டு கொல்லும் மரணத் தண்டனையை வழங்கியுள்ளார் அதிபர் கிம் ஜான் உன்.
தென் கொரியாவில் உருவாக்கப்பட்ட வெப் சீரியஸ் Squid game. இந்தத் தொடரில் வரும் முதல் விளையாட்டில் மனிதர்களை ஓடவிட்டு சுட்டு வீழ்த்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதே தண்டனைதான் தற்போது வடகொரியாவில் வெப் சீரிஸ் பரப்பிய இளைஞருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் Squid game வெப் சீரிஸை பெற்றுக்கொண்ட மற்றொரு இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும் மற்ற 5 இளைஞர்களுக்கு சித்திரவதையுடன் கூடிய 5 வருட கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் தற்போது உலகம் முழுக்க பரவிய நிலையில் ஒரு வெப் சீரிஸை பார்ப்பதற்கு மரணத்தண்டனையா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com