அர்ப விஷயத்துக்காக… கேப்டனையே பொது இடத்தில் சுட்டுக் கொன்ற பயங்கரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென் கொரியா கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் படு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் இதற்கு அப்படியே எதிர்மறையாக வடகொரியாவில் சர்வாதிகாரம் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நாட்டில் இருக்கும் மக்கள் வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ளவோ, ஏன் வெளிநாட்டின் டிவி, ரேடியா சேனலைப் பார்க்ககூட அனுமதி கிடையாது.
அதுவும் கொரோனா நேரத்தில் வடகொரியாவின் விதிமுறைகள் பல உலக நாடுகளையே கதிகலங்க வைத்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் கொரியாவின் ரேடியோ சேனலை வடகொரியாவைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஒருவர் டியூன் செய்த கேட்டார் என்ற குற்றத்திற்காக பொது இடத்தில் வைத்து நூற்றுக் கணக்கான மக்கள் மத்தியில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். இந்தச் செயல் உலக நாடுகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உங் கொரோனா நேரத்தில் தொடர்ந்து பல பயங்கரமான சட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதில் எல்லையைத் தாண்டி வரும் எவரும், கேள்வி இல்லாமலே சுடப்படுவர் என்பதும் ஒன்று. இதைத்தவிர தென்கொரியாவுடன் இருந்து வந்த எல்லை போக்குவரத்து உட்பட அனைத்தையும் தடை செய்தார். தற்போது கப்பல் கேப்டன் ஒருவரை அந்நாட்டு இராணுவப் பாதுகாப்புப் படை பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொலை செய்து இருக்கிறது.
காரணம் வடகொரிய மக்களுக்கு வெளிநாட்டுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வெளி உலகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவோ அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் இராணுவத்து றையில் ரேடியோ ஆப்பரேட்டராக வேலைப்பார்த்த முன்னாள் அதிகாரி சோய் (40) தனது ஓய்விற்கு பிறகு சொந்தமாக ஒரு மீன்பிடி கப்பலை வாங்கி இயக்கி வருகிறார். அந்த மீன்பிடி கப்பலை வைத்துக் கொண்டு நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது தென் கொரியாவின் ரேடியோ அலைவரிசையை டியூன் செய்து பலமுறை கேட்டு வந்துள்ளார்.
முன்பு இராணுவத்தில் பணியாற்றிய போதும் ரகசியமாகச் சோய் இப்படி பலமுறை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு கப்பல் தொழிலுக்கு வந்தப் பிறகும் வடகொரியாவின் சட்டவிரோத செயலாகக் கருதப்படும் ரேடியோ கேட்பதைத் தொடர்ந்து இருக்கிறார். இந்நிலையில் கப்பலில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளி ஒருவருடன் முரண்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அந்த முரண்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு இருந்த அத்தொழிலாளி வடகொரியாவின் பாதுகாப்பு படையிடன் சோயின் ரகசியச் செயலை போட்டு உடைத்து இருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டு பாதுகாப்பு படை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் இருந்து திரும்பி வந்த சோயை நேராக அழைத்துக் கொண்டு ஒரு பொதுவெளிக்கு வந்திருக்கிறது. வந்தவுடன் பக்கத்துநாட்டு ரேடியோ சேனலைக் கேட்டதற்காக உங்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படுகிறது என ஒரு அதிகாரி கூறி இருக்கிறார். அந்தக் கட்டளை பிறந்தவுடனே பல நூறு இராணுவ ஊழியர்கள் இருந்த பொதுவெளியில் சோய் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் உலக நாடுகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments