கனமழை காரணமாக உணவுப்பஞ்சத்தால் வாடும் வடகொரிய மக்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
வடகொரியா நாட்டில் அதிக கனமழை பெய்ததில், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.
கனமழை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, அந்நாட்டின் ராணுவத்திற்கு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த செய்தியை அந்நாட்டின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வடகொரியாவில் வெள்ளம் ஏற்பட்டதால் அங்குள்ள 1000 வீடுகள் சேதமடைந்ததில், சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடியும், உணவுப்பற்றாக்குறையும், பதற்றமும் நிலவி வருகிறது. சென்ற வருடம் ஏற்பட்ட புயல், சூறாவளி தாக்குதல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில், தானிய உற்பத்தி என்பது சரியாக இல்லை. இதனால் நடப்பாண்டில் நல்ல அறுவடையாக இருக்கும் என மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்யோங்கில் ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருந்தன. நூற்றுக்கணக்கானோரின் கூரைகள் மற்றும் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில், அங்கு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அழிவில் இருந்து மக்களை மீட்பது குறித்து விவாதம் செய்ய, ஆளும் தொழிலாளர் கட்சியின் ராணுவ ஆணையம் கடந்த வியாழன்று கூட்டத்தை நடத்தியது. ஆனால் இதில் கிம் ஜோங் உன் கலந்துகொள்ளாமல், மக்களுக்கு தேவைப்பட்ட பொருட்களை ராணுவம் அந்தந்த பகுதிகளில் வழங்க வேண்டும் என்று அதிகாரியிடம் கூறி அனுப்பியிருந்தார்.
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, வடகொரியாவின் எல்லைப்பகுதியில் மூடப்பட்டுள்ளது. இதனால் உணவு, உரம் மற்றும் எரிபொருள் தேவைகளுக்காக சீனாவை மட்டுமே வடகொரியா நம்பியுள்ளது. எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, நாடு தழுவிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத சோதனையினால், இந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout