வடகொரியா, தென் கொரிய எல்லை நோக்கி துப்பாக்கிச் சூடு!!! நடப்பது என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரியாவின் இருநாடுகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதியில் நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சண்டையில் வட கொரிய இராணுவம் தடை செய்யப்பட்ட தென் கொரிய இராணுவப் பாதுகாப்பு மண்டலத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டது என்றும் அதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தென்கொரிய அரசு செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும் வட கொரியாவிற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக தென் கொரியா இரண்டு சுற்று துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாகவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும், வட கொரியாவின் துப்பாக்கி சூடு குறித்து காரணம் தெரியவில்லை எனவும் தென கொரியா குறிப்பிட்டு இருக்கிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 15 ஆத் தேதி முதல் பொது வெளியில் தென்படவில்லை என்ற காரணத்தால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளிவந்தன. அதிபர் இறந்துவிட்டர் என்று கூட பல நாடுகளின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த வதந்திகளைக் குறித்து தென் கொரிய அதிகாரப் பூர்வமான எந்த தகவலையும் ஊறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வடகொரிய தலைநகரில் ஒரு உரத்தொழிற்சாலை நிறுவனத்தின் தொடக்க விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார் என்று அந்நாட்டு அரசு ஊடகம் அதிகாரப் பூர்வமாக செய்தி வெளியிட்டது. இது குறித்து எந்த கருத்தையும் முதலில் தெரிவிக்க மறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின்பு வடகொரிய அதிபர் உயிரோடு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரியாவின் நாடுகளுக்கு இடையே உள்ள 155 மைல் எல்லைப்பகுதி உலகில் மிகவும் பதட்டமான இடமாகக் கருதப்பட்டு வருகிறது. எல்லைச் சுரங்கங்கள், இராணுவ மண்டலங்கள் போன்ற இடங்களில் வேலிகள் போடப்பட்டு இருநாடுகளும் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. இருநாட்டு எல்லைப்பகுதிகளிலும் சுமார் 2 மில்லியன் இராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வடகொரியா கடந்த 5 வருடங்களில் எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிபர் உடல்நிலை பற்றி வதந்திகள் வெளிவந்த நிலையில் வடகொரியா துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறது. இதுகுறித்து வடகொரிய இராணுவம் தென் கொரியாவை தொடர்பு கொள்வதற்காக இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு கொரிய போர் முடிந்ததும் இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் எந்த ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கையேட்டினையும் இருநாடுகளும் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பாதுகாப்பு கையேட்டின் நடவடிக்கையில் கூறியப்படி தென் கொரிய இராணுவம் வெறுமனே 2 ரவுண்டு துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் கிம் ஜாங் உன் க்கு பிறகு அந்நாட்டின் அடுத்த அதிபர் யார் என்ற ஆலோசனைகளில் பல நாடுகளின் ஊடகங்கள் ஈடுபட்டு வந்தன. இத்தகைய வதந்திகளுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக வடகொரியா தனது இருப்பை வெளிப்படுத்த இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout