அண்டை மாநிலத்தில் பீதியைக் கிளப்பும் புதிய வகை நோய்… தமிழகத்துக்கும் பாதிப்பா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் பரவிவரும் புதிய வகை தொற்றால் கடந்த வாரம் 11 வயது சிறுவன் உயிரிழந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவுக்கு நடுவில் பரவிவரும் இந்த புதிய வகை நோய்த்தொற்றால் அம்மாநிலத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் கொரோனா போல இதுவும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டது என்பதால் கடும் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் புதிதாக ஒரு நோய்த்தொற்று பரவி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நோய்த்தொற்று பாக்டீரியாவினால் ஏற்படுகிறது என்றும் மனித மலம் கலந்த நீரினால் இப்புதிய நோய்த்தொற்று உருவாகி இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே கோழிக்கோடு பகுதியில் பல்வேறு சுகாதார அமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மனித மலம் கலந்த நீரினால் ஏற்படும் புதிய வகை நோய்த்தொற்றுக்கு விஞ்ஞானிகள் ஷிகெல்லா எனப் பெயரிட்டு உள்ளனர். கோழிக்கோட்டு பகுதியில் இருந்து கோட்டப்பரம்பு வரை பலரையும் இந்நோய் தாக்கி இருக்கிறது. முதலில் 6 பேருக்கு மட்டும் பாதிப்பு 26 பேருக்கு அறிகுறிகள் ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறப்பட்ட நிலையில், பலருக்கு இந்நோய் அறிகுறி இல்லாமலே பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நோய் பாதித்தவருக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற அறிகள் இருக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் 3 நாட்கள் தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் 50 க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால் கேரளாவின் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் கூறி இருக்கிறது. இதனால் கோழிக்கோடு மக்கள் கடும் அச்சத்தில் தவித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனாவைப் போல இந்நோய்த்தொற்றும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும் தன்மையைக் கொண்டிருப்பதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அப்பகுதியில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments