ஐரோப்பிய நாடுகளின் பிளாக்பஸ்டர் ஆனது 'தெறி'

  • IndiaGlitz, [Saturday,April 23 2016]

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்.
மேலும் இந்த படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததை விட அதிகமான வசூலை பெற்று வருகிறது. அமெரிக்காவில் 'தெறி' ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த படம் 'பிளாக்பஸ்டர்' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, ஆகிய நாடுகளில் 'தெறி'யின் வசூல் தெறிக்க வைத்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் 'தெறி' படத்தின் வசூல் சிறப்பாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் மற்றும் அட்லி கூட்டணிக்கு இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் '2.0'வில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது....

நடிகர் சங்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை அஜித் கூறியது உண்மைதானா? எஸ்.வி.சேகர் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் 'நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தபோதிலும் இந்த போட்டியை நடத்த திட்டமிட்ட நாளில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய கருத்துக்கள்...

ஸ்ருதிஹாசனுடன் நடித்த உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

சமீபத்தில் நடந்த 'நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் தந்தை கமலுடன் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன்...

அனிருத்தின் முதல் திகில் பட சிங்கிள் ரிலீஸ் தேதி

பீப் பாடல் பிரச்சனையில் இருந்து வெளியே வந்த பின்னர் அனிருத் இசையமைக்க ஒப்புக்கொண்ட படம் 'ரம்' என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் தேதி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் விஜய்யின்...