பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய நூரின் செரிப்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன் 'ஒரு ஆதார் லவ்' என்ற படத்தில் நடித்த பிரியா வாரியர், அந்த படத்தின் டீசரின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவருடைய ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம், இந்திய இளைஞர்களை அடிமையாக்கியது

இந்த நிலையில் இதே படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்த நூரின் செரிப் என்ற நடிகையின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

வெறும் 15 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் ஆங்கில இசைக்கு ஏற்ப இவர் பரதநாட்டியம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது கேரளாவில் வைரலாகி வருவதால் இவர் பிரியாவாரியரை பின்னுக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது