'பீப் சவுண்ட்' இல்லாத 'துணிவு'; அஜித் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Wednesday,February 08 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற ’துணிவு’ திரைப்படம் நேற்று நள்ளிரவு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் இந்த படம் வெளியான போது சில சர்ச்சைக்குரிய அஜித்தின் வசனங்கள் மியூட் செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. ஆனால் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள ’துணிவு’ திரைப்படத்தில் எந்தவித மியூட்டும் இல்லாமல் சென்சார் செய்யப்படாத ’துணிவு’ திரைப்படம் வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் குஷியுடன் இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலரது நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ திரைப்படம் திரையரங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

ஆரம்பமாகிறது 'பொன்னியின் செல்வன் 2' புரமோஷன்.. முதல் அப்டேட் இதுதான்..!

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு

”ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே”: 'விடுதலை' சிங்கிள் பாடல்..!

 வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விடுதலை'. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள

'ஜெயிலருக்கு அடுத்த படம்.. ரஜினியின் கேரக்டர் இதுவா? ரசிகர்கள் ஆச்சரியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.

மணிஹெய்ஸ்ட் Prequel ரிலீஸ் குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமான மணிஹெய்ஸ்ட் தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் இந்த தொடர் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. 

53 வயதிலும் கிளாமரில் கலக்கும் ராமராஜன் பட நாயகி..!

ராமராஜன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை 53 வயதிலும் கிளாமரில் கலக்கியுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.